ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2
1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய்
சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே
வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே
அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2
மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே
விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2
2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே
மா ஜோதி மானிடரானார்
உன்னை மீட்க தம்மை பலியாக தந்த
அவர் அன்பிற்கு இணையில்லையே-2
நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே
நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2
Aalugai seiyum aaviyanavare | ஆளுகை செய்யும் ஆவியானவரே | Jebathotta Jeyageethangal Vol 14 : Fr. Berchmans
ஆளுகை செய்யும் ஆவியானவரே பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே ஆவியானவரே – என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும் பேச்செல்லாம் உமதாகணும் நாள் முழுதும் வழிநடத்தும் உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனே காயம் கட்டும் கர்த்தாவே கண்ணீரெல்லாம் துடைப்பவரே – என் 3. புதிதாக்கும் பரிசுத்தரே புதுப்படைப்பாய் மாற்றுமையா உடைத்துவிடும் உருமாற்றும் பண்படுத்தும் பயன்படுத்தும் 4. அப்பாவை அறிந்திடணும் வெளிப்பாடு தாருமையா மனக்கண்கள் ஒளிபெறணும் மகிமையின் அச்சாரமே 5. உள்ளான மனிதனை வல்லமையாய் பலப்;படுத்தும் அன்பு ஒன்றே ஆணிவேராய் அடித்தளமாய் அமைந்திடணும் 6. கிறிஸ்துவின் அன்பின் ஆழம் அகலம் அயரம் உணரணுமே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்பவரே 7. சங்கீதம் கீர்த்தனையால் பிறரோடு பேசணுமே எந்நேரமும் எப்போதுமே நன்றிப் பலி செலுத்தணுமே 8. போர் செய்யும் ஆயதமாய் உம் வசனம் தாருமையா எல்லாவித ஜெபத்தோடு ஆவியிலே மன்றாடணும் 9. என் இதய பலகையிலே எழுதிடும் உம் வார்த்தை மையாலல்ல உம் ஆவியாலே எழுதிடுமே ஏங்குகின்றேன் 10. அரண்களை தகர்த்தெறியும் – என் அன்...
Comments
Post a Comment