Skip to main content

Posts

Showing posts from July, 2019

Uyar Malaiyo | உயர் மலையோ | John Jebaraj

               எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் Chorus: உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன் என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன் ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு விட்டு கொடுக்காத பேரழகு உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும் நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு அட ஊர் என்ன சொன்னாலும் பார் எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு நிகர் இல்லாத தகப்பனுக்கு ...

THALAI THANGA MAYAMAANAVAR | தலை தங்க மயமானவர் | Gersson Edinbaro

               தலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அன்பே உருவானவர்-2 இவரே என் சாரோனின் ரோஜா நீதியின் சூரியனும் இவரே இவரை போல் அழகுள்ளவரை யாராலும் காட்ட கூடுமோ-2 தலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் வெண்மையும் சிவப்புமானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அக்கினி ஜூவாலைகள் போல் அவர் கண்கள் எரிந்திடுதே பெரு வெள்ள இரைச்சல் போல அவர் சத்தம் தொனித்திடுதே-2 தலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அன்பே உருவானவர்-2

UMAKKU UDHAVI THEVAYILLAI | உமக்கு உதவி தேவையில்லை | Gersson Edinbaro

                  ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2 Chorus : உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 1.நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும் நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2 2.காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர் கல்லை பிளந்து தண்ணீர் தருவீர் ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர் கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர் உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய் து முடிக்கும்-2 3.ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும் என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும்-2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும்-2-ஒருவராய்

ad